
நடிகர் விஜயகாந்த் வரும் 26-ஆம் தேதி கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலின்போது கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் பரப்புரை செய்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் மீதான வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
விஜய்காந்த் இன்று ஆஜராக ஏற்கெனவே சம்மன் வழங்கப்பட்டு இருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் தமிழ்மணி ஆஜராகி விஜயகாந்த் உடல்நிலை காரணமாக ஆஜராகவில்லை என தெரிவித்தார். இதன் இடையே வரும் 26-ம் தேதி விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.