\
சீமைக்கருவை மரங்களை அகற்ற அனுமதி வழங்கியது நீதிமன்றம்

சீமைக்கருவை மரங்களை அகற்ற அனுமதி வழங்கியது நீதிமன்றம்

சீமைக்கருவை மரங்களை அகற்ற அனுமதி வழங்கியது நீதிமன்றம்
Published on

சீமைக்கருவை மரங்களை படிப்படியாக அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் சீமைக்கருவை மரங்கள் அகற்றப்படுவதால் ப‌ல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இதனால் இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னையைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் அடிப்படையில் சீமைக்கருவை மரங்களை அகற்ற கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி நீதிமன்றம் தடை விதித்தது.

இது தொடர்பாக தமிழக அரசு குழு அமைத்து, அக்குழு அறிக்கை தாக்க‌ல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிகள் சுந்தரேஷ், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விச‌ரணைக்கு வந்தது. அப்போது, நிபுணர்கள் குழு அளித்த அறிக்கை அடிப்படையில் சீமைக்கருவை மரங்களை அகற்ற உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும் முதல்கட்டமாக நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவை மரங்களை அகற்ற வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com