நெல்லை | இருசக்கர வாகனத்தின் மீது முட்டிய மாடு... பரிதாபமாக உயிரிழந்த நபர்

நெல்லையில் இருசக்கர வாகனத்தின் மீது மாடு முட்டியதில், பேருந்து சக்கரத்தில் சிக்கி நீதிமன்ற ஊழியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை - மாடு முட்டியதில் ஒருவர் மரணம்
நெல்லை - மாடு முட்டியதில் ஒருவர் மரணம்புதிய தலைமுறை

நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்த வேலாயுதராஜ் என்பவர், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இளநிலை கட்டளை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இருசக்கர வாகனத்தில் அவர் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், சாலையில் இரண்டு மாடுகள் சண்டையிட்டுள்ளன.

Cows
Cowsகோப்புப்படம்

பின்னர், அவை சாலையில் ஓடிய நிலையில், ஒரு மாடு வேலாயுதராஜின் இருசக்கர வாகனத்தில் முட்டியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது, அரசு பேருந்து ஏறியது.

நெல்லை - மாடு முட்டியதில் ஒருவர் மரணம்
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு; சென்னையில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி கைது

இதில் வேலாயுதராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com