தமிழ்நாடு
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு: அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவு!
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில் ஜூலை 14 ஆம் தேதி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைவர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அறிவித்திருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் கட்சியின் மூத்த தலைவர்களின் சொத்துப் பட்டியலை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டிருந்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
MP TR Balupt desk
அவர்களில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் வரும் ஜூலை 14 ஆம் தேதி அண்ணாமலை நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.