சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்pt web

சவுக்கு சங்கருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Published on

யூட்யூபர் சவுக்கு சங்கர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த போது தனது அறையில் இரண்டரை கிலோ கஞ்சா வைத்திருந்ததாக பழனிசெட்டிப்பட்டி காவல்துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்pt web

தொடர்ந்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 8ஆம் தேதி சவுக்கு சங்கருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 20ஆம் தேதி அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு செய்திருந்தது.

 சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் விவகாரம்; நீதிபதிக்கே அழுத்தம் கொடுப்பவர்கள் யார்? CBI விசாணைக்கு கோரி கடிதம்

இதனையடுத்து 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் சவுக்கு சங்கருக்கு ஜூன் 5ஆம் தேதி வரை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவு பிறப்பித்தார்.

 சவுக்கு சங்கர்
”எனக்கு கொடுக்கப்பட்ட வேலை கட்சியை வளர்ப்பதுதான்” - தேர்தல் முடிவுகள் குறித்து அண்ணாமலை விளக்கம்!

இந்நிலையில் நீதிமன்றக்காவல் நிறைவடைந்து கோவை மத்திய சிறையில் காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு நேற்று சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com