செந்தில் பாலாஜி PT WEP
தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு
3 மாதங்களுக்குப் பிறகு நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 47ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்துக்கு வந்தது. இதற்காக புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு அவர் அழைத்து வரப்பட்டார். 3 மாதங்களுக்குப் பிறகு நீதிபதி அல்லி முன்பு நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டார்.
senthil balajipt web
அப்போது நீதிமன்ற உத்தரவின்படி, வங்கி ஆவண நகல்களை செந்தில் பாலாஜி தரப்பிடம் அமலாக்கத்துறை வழங்கியது. இதனை கையெழுத்திட்டு பெற்று கொண்ட நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 18 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.