Court Clears Ponmudi in Alleged Red Sand Quarry Scam
பொன்முடி Pt web

செம்மண் குவாரி ஊழல் வழக்கு.. பொன்முடி உட்பட 7 பேர் விடுதலை.. நீதிமன்றம் அதிரடி!

முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கெளதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அனைவரையும் விடுதலை செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on
Summary

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்த செம்மண் குவாரி ஊழல் வழக்கில், பொன்முடி, மகன் கௌதமசிகாமணி உள்ளிட்ட 7 பேருக்கு விடுதலை. 2006-11ல் விதிமீறி செம்மண் எடுத்து ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு இருந்த நிலையில், 57 சாட்சிகளில் பெரும்பாலோர் அரசுக்கு எதிராக சாட்சி அளித்ததும், ஆவணங்கள் போதாமை காரணமாகவும் குற்றம் நிரூபிக்க முடியாததால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில், கடந்த 2006-11ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலக்கட்டத்தின் போது, விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ 28.36 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக தெரிவித்து அப்போதைய அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கௌதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பொன்முடி
பொன்முடிx

இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், மற்ற 7 பேர் மீதான அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை கடந்தாண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்தது. இவ்வழக்கில் 57 சாட்சிகளில் 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்திருந்தனர். இதையடுத்து, ஏப்ரல் 2 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக கடந்த மார்ச் 2 ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மணிமொழி அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று, இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பிற்காக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கெளதமசிகாமணி, கோதகுமார், சதானந்தம் உள்ளிட்ட ஏழு பேர் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது தீர்ப்பினை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மணிமொழி, அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 57 பேரில் 33 பேர் அரசுக்கு பாதமாக சாட்சி அளித்துள்ளதாலும், போதிய அளவு ஆவணங்கள் தாக்கல் செய்யபடாததாலும் பொன்முடி உட்பட 7 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Court Clears Ponmudi in Alleged Red Sand Quarry Scam
ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை| ’9 பேரையும் தூக்குல போடுங்க..’ சிபிஐ வைத்த வாதம்! தண்டனை எப்போது..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com