தமிழ்நாடு
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் வீடுகள் கட்ட நீதிமன்றம் தடை
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் வீடுகள் கட்ட நீதிமன்றம் தடை
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வீடுகள் கட்டும் குடிசை மாற்றுவாரிய திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், 4,710 வீடுகள் கட்ட குடிசை மாற்றுவாரியம் திட்டமிட்டது. ஆனால் அந்தப் பகுதியில் வீடுகள் கட்டுவதற்கு எதிராக பழங்குடியினர் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வீடுகள் கட்டும் குடிசை மாற்றுவாரிய திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஒப்புதல் அளிக்காதவரை பணிகளை மேற்கொள்ளக்கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.