”எங்கள் நிலத்தை ஏமாற்றிவிட்டார்கள்”..ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி

”எங்கள் நிலத்தை ஏமாற்றிவிட்டார்கள்”..ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி
”எங்கள் நிலத்தை ஏமாற்றிவிட்டார்கள்”..ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி

ஈரோடு அருகே கடனுக்கு பெற்ற நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் கொங்கர்பாளையத்தில் சுந்தரம்-பாப்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான 82 செண்ட் விவசாய நிலத்தை 2008ஆம் ஆண்டு பாலு என்பவரிடம் அடகு வைத்து 60 ஆயிரம் கடன் பெற்றுள்ளனர். இதற்கு 2019ஆம் ஆண்டு 60 ஆயிரத்துடன் 2 லட்சத்து 94 ஆயிரத்தை சேர்த்து வழங்கியுள்ளதாக கூறுகின்றனர். இருப்பினும் தற்போது வரை நிலத்தை திருப்பி ஒப்படைக்காமல் இருந்து வருவதாக தெரிவித்தனர். மேலும் கடன் பத்திரத்திற்கு பதிலாக பத்திர உடன்படிக்கை பத்திரத்தில் கையெழுத்து வாங்கி மோசடி செய்து தற்போது அந்த இடத்தை வேறொருவருக்கு விற்பனை செய்துள்ளதாக புகார் தெரிவித்தனர்.

மோசடியாக நிலத்தை பெற்று வேறொருவருக்கு விற்பனை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இருவரையும் தடுத்து அழைத்துச் சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com