சேலத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்த மணமகள் கடத்தல்: 50 பேர் மீது வழக்கு

சேலத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்த மணமகள் கடத்தல்: 50 பேர் மீது வழக்கு

சேலத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்த மணமகள் கடத்தல்: 50 பேர் மீது வழக்கு
Published on

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதியரை தாக்கி மணமகள் கடத்தப்பட்டுள்ளதாக எழுந்த புகாரில், 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த செல்வன், இளமதி இரு‌வரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது காத‌லித்துள்ளனர். இருவேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். திராவிட விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த செல்வன், அந்த இயக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினரான ஈஸ்வரன் உதவியோடு கடந்த திங்கள்கிழமையன்று இளமதியை திருமணம் செய்து கொண்டார்.

அன்று இரவே கார்கள் மற்றும் பைக்குகளில் வந்த சுமார் 40 பேர் கொண்ட கும்பல் திருமணம் செய்து வைத்த ஈஸ்வரனை தாக்கி காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். வழிஎங்கும் ஈஸ்வரனை துன்புறுத்தி புதுமணத் தம்பதியின் இருப்பிடத்தை கேட்டுள்ளனர். அப்போது உக்கம்பருத்திக்காடு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் புதுமணத்தம்பதி சென்றதை பார்த்த இந்த கும்பல், புதுமாப்பிள்ளையை தாக்கிவிட்டு மணமகள் இளமதியை கடத்திச்சென்றது.

சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள இந்த சம்பவத்தில், இளமதி, செல்வன் மற்றும் ஈஸ்வரன் தனித்தனி காரில் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதன் பின் காவல்துறையினர் தங்களுக்கு வந்த புகாரை தொடர்ந்து விரைந்து செயல்பட்டு மணமகன் செல்வன் மற்றும் ஈஸ்வரன் இருவரையும் மீட்டனர்.

இதனிடையே கடத்தப்பட்ட புதுப்பெண் இளமதியை மீட்க வலியுறுத்தியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நள்ளிரவு கொளத்தூர் காவல்நிலையத்தை திராவிட விடுதலை கழகத்தினர் முற்றுகையிட்டனர். இந்நிலையில் மணமகன் செல்வன் கொடுத்த புகாரின் பேரில் 50 பேர் மீது கொளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் பிடிபட்ட 18 பேர் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டம், கொலைமு‌யற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதியப்பட்டது. தப்பியோடியவர்களையும் மணப்பெண் இளமதியையும் தேடும் பணியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com