சென்னையில் ரவுடியை அடித்துக்கொலை செய்து முட்புதரில் வீசிய தம்பதி!

சென்னையில் ரவுடியை அடித்துக்கொலை செய்து முட்புதரில் வீசிய தம்பதி!

சென்னையில் ரவுடியை அடித்துக்கொலை செய்து முட்புதரில் வீசிய தம்பதி!
Published on

ரவுடியை அடித்துக் கொலை செய்து முட்புதரில் வீசி விட்டு நாடகமாடிய தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை கொரட்டூர் அடுத்த கலைவாணர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கிற கிரைம் சுரேஷ். இவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இவரை கடந்த  14 ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தாய் கலா, கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரையடுத்து கொரட்டூர் காவல் துறையினர் சுரேசை பல இடங்களில் தேடி வந்தனர். சுரேஷ் காணாமல் போன விவகாரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயகொடி- கார்த்திகா தம்பதி மீது சந்தேகம் எழுந்தது. 

இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சுரேஷ் அத்துமீறி தங்கள் வீட்டிற்குள் நுழைந்ததாகவும் இதனால் அவரை அடித்து உதைத்து கட்டி போட்டதாகவும் தெரிவித்தனர். பின்னர் அவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுரேஷ் தப்பி சென்றுவிட்டதாகவும் கூறினர். ஆனால் தம்பதி மீது போலீசாருக்கு சந்தேகம் நீடித்தது.

இதனையடுத்து தம்பதியை குறுக்கு விசாரணை செய்தனர். இதில் சுரேஷை தாங்கள் தான் கொலை செய்தோம் என தம்பதி ஒப்புக்கொண்டனர். சுரேஷின் உடலை செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் உள்ள முட்புதரில் வீசியதாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த கொரட்டூர் காவல்துறையினர் சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தகாத உறவு காரணமாக இந்தக்கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து இந்தக்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com