நாட்டு நாய்கள்
நாட்டு நாய்கள்web

அந்நிய மோகத்தால் வஞ்சிக்கப்படும் நாட்டு நாய்கள்.. மாறுமா நிலை?

கடந்த ஒரு வடத்தில் தமிழகத்தில் மட்டும் நாய்கடியால் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, அதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் நாய்கடி அலட்சியத்தால் நிறைய உயிரிழப்புகள் நடந்துவரும் நிலையில், நய் உடனான மனிதனின் பிணைப்பை தெரிந்துகொள்ளலாம்.
Published on

- காமேஷ் குமார்

நாம் இரவில் இரு சக்கர வாகனத்தில் வேலை அல்லது சினிமா பார்த்துவிட்டு வீட்டுக்கு செல்லும்போது, அந்த நடு இரவில் திடீரென ஒரு சத்தம் வரும், நாம் பகிரென நிலை குலைந்து தடுமாறுவோம். சில நாய்கள் குலைத்து கொண்டு நம் வாகனத்தை துரத்தும்.. சில பேர் வண்டியை வேகமாக ஓட்டி வந்து விடுவார்கள்.. சில பேர் கீழே விழுவார்கள் சில பேர் இறக்கவும் நேரிடுகிறது.. அதுமட்டுமில்லாமல் நடந்து செல்லும் குழந்தைகளை பல நாய்கள் துரத்தி கடிக்கும் நிகழ்வும் ஏற்படுகிறது.

இதற்கு தகுந்த தடுப்பூசி போட்டு விட்டால் பரவாவில்லை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால், ரேபிஸ் போன்ற கொடிய வைரஸ் பரவி இறக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது..

கடந்த வருடத்தில் தமிழ்நாட்டில் மட்டும் நாய் கடியால் 4,80,000 பாதிக்கப்பட்டு இதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்...

மனிதன் உடனான நாய் பிணைப்பு..

பொதுவாக தெரு நாய்கள் நம் நாட்டு நாய்கள் தான் உள்ளது... வீட்டில் யாரும் இப்போது நாட்டு நாய்களை வளர்ப்பதில்லை பெரும்பாலும் வெளி நாட்டு வகை நாய்களைத்தான் வளர்க்கிறார்கள்.. குறிப்பாக நகரத்தில்தான் நிறைய வீட்டில் இவ்வாறு உள்ளது.

சரி இப்போது மனிதனுக்கு நாய்கள் எப்படி உதவின என்பது பற்றி சற்று பின்னோக்கி பார்ப்போம். மனிதன் ஆதி காலத்தில் இருந்து வன விலங்குகளை வேட்டையாடி தன் உணவு தேவையை பூர்த்தி செய்தான்... அப்போது வேட்டையாட மனிதனுக்கு உற்ற நண்பனாக நாய்கள் இருந்தன. கால மாறுபாட்டால் மனிதன் விவசாயம் நோக்கி நகர தொடங்கிய போது ஆடு, மாடுகள் உதவின. நாய்கள் காவலுக்கு மட்டும் பயன் படுத்தப்பட்டன.

தெரு நாய்கள்
தெரு நாய்கள்கோப்புப்படம்

விஞ்ஞான வளர்ச்சியால் மாடுகள் விவசாய தேவைக்கு பயன்படுத்துவது குறைந்தாலும், பால் மற்றும் இறைச்சிக்காக அவைகள் பயன் படுத்தப்பட்டன. ஆனால் நாய்கள் காவல் மற்றும் காவல் துறை சார்ந்த பணிகளுக்கு மட்டும் பயன் படுத்தப்படுகின்றன. காலம் காலமாக மனிதனை மட்டுமே நாய்கள் சார்ந்து இருக்கின்றன.

மனிதனின் வெளிநாட்டு மோகம் நாய்கள் வளர்ப்பதிலும் எதிரொலித்தது, இதன் வெளிப்பாடு நம் நாட்டு நாய்கள் தெருவில் யாரும் இல்லாத அநாதை போல் தெருவில் சுற்றி திரிகிறது.

வளர்ப்பு நாய்களுக்காக 1200 கோடியில் உணவு இறக்குமதி..

நாட்டு நாய்கள் நம் நாட்டின் சீதோசன நிலைக்கு ஏற்ற நிலையில் வாழ்கிறது. உணவும் நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதி கொடுத்தால் போதுமானது. ஆனால் வெளிநாட்டு நாய்களுக்கு அப்படி இல்லை. சீதோசன நிலை, உணவு, மருத்துவம் அனைத்திலும் மறைந்து இருக்கும் வணிகம் எவ்வளவு தெரியுமா. கடந்த ஆண்டு நாய்களுக்கான உணவுக்காக மட்டும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட உணவின் மதிப்பு மட்டும் சுமார் 1200 கோடிக்கு மேல் இருக்கும். இவை இல்லாமல் மருத்துவம் மற்ற செலவுக்கு எல்லாம் சேர்த்தால் அதன் மதிப்பு நம் வாயை பிளக்க வைக்கும்.

நாட்டி நாய்
நாட்டி நாய்

மலையாளத்தில் நெய்மர் என்ற படத்தில் நாட்டு நாயின் சிறப்பை பற்றி காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பார்கள். அதுபோல் நம் படங்களிலும் நம் நாட்டு நாய்களை விளம்பர படுத்த வேண்டும். அரசும் சில வெளிநாட்டு நாய்களுக்கு தடை விதித்துள்ளது, மக்களும் அதை பின் பற்ற வேண்டும்.. நம் நாட்டு நாய்களை நம் வீட்டில் சரியான தடுப்பூசி போட்டு வளர்ப்பதன் மூலம் அதன் இனங்களையும் அழியாமல் பாதுகாக்கலாம்.. தெருவில் யாரோ ஒருவர் போடும் உணவுக்காக அலையும் நாய்கள்... பல வண்டிகளில் அடிபட்டு இறக்கின்றன மனிதனையே சார்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு உயிர் இனத்துக்கு மனிதராகிய நாம் தான் அடைக்கலம் கொடுக்க வேண்டும்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com