"முகவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்"சென்னை மாநகராட்சி ஆணையர்

"முகவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்"சென்னை மாநகராட்சி ஆணையர்

"முகவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்"சென்னை மாநகராட்சி ஆணையர்
Published on

சென்னையில் வாக்கு எண்ணிக்கையின் போது, முகவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது கொரோனா இல்லை என்ற சான்று கொண்டு வர வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முகவர்கள் அனைவரும் 48மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் எனக் கூறினார். இதே போல செய்தியாளர்களும் பரிசோதனை செய்து கொண்டு, தொற்று இல்லை என்றால் உள்ளே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்தார். வடமாநிலங்களுடன் ஒப்பிடுகையில், சென்னையில் கொரோனாவால் இறப்போர் விகிதம் மிகக்குறைவு என பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com