Dr.Ramadasfile
தமிழ்நாடு
”TNPSC புள்ளியியல் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும்” - இராமதாஸ்
TNPSC புள்ளியியல் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் இராமதாஸ் தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் தேர்வுகளை வெளியிட்டு 5 மாதங்களாகியும் அதில், வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் கலந்தாய்வு நடத்தி பணி ஆணைகள் வழங்கவில்லை.
X Pagejpt desk
இதனால் தேர்வெழுதியவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுளளனர். ஆவர்களின் மன உளைச்சலை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு அட்டவணையை தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். அடுத்த ஒரு மாதத்திற்குள் கலந்தாய்வை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பணி ஆணையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.