பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்:  செங்கோட்டையன்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்: செங்கோட்டையன்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்: செங்கோட்டையன்
Published on

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு மணி நேரம் கவுன்சிலிங் தரப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பள்ளிகள் திறந்தவுடன் 24 மணி நேரத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக, எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஜீனியர்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், மாணவர் மற்றும் மாணவி பிரிவில் முதல் இடத்தை சென்னை அணி பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கேடயம், சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர் பச்சைமுத்து உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com