மேட்டுப்பாளையம்: எரியாத தெருவிளக்கில் தீப்பந்தம் கட்டி போராட்டம் நடத்திய கவுன்சிலர்!

எரியாத தெருவிளக்கில் தீப்பந்தம் கட்டி போராட்டம் நடத்திய கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு எல்.எஸ்.புரம் முதல் வீதியில் கடந்த பல வாரங்களாக தெரு விளக்கு பழுதடைந்து எரியாமல் இருந்துள்ளது. தெருவிளக்கு இல்லாததால் ஏற்பட்ட இருளினால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அடிக்கடி சிறிய அளவில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறதென சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தீப்பந்தம் கட்டி போராட்டம்
தீப்பந்தம் கட்டி போராட்டம் PT Tesk

இதனையடுத்து அந்த வார்டின் நகர்மன்ற கவுன்சிலர் (அதிமுக) சுனில்குமார் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தெரு விளக்கு எரியாத மின் கம்பத்தில் தீப்பந்ததை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது விரைவில் அப்பகுதியில் சோடியம் லைட் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com