\
"அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்"- மதுரை மாவட்ட பாஜக செயலாளர்

"அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்"- மதுரை மாவட்ட பாஜக செயலாளர்

"அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்"- மதுரை மாவட்ட பாஜக செயலாளர்
Published on

அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்து காணப்பட்டதால் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் திமுக அரசுக்கு எதிராக செயல்படமாட்டார்கள் என மதுரை மாவட்ட பாஜக செயலாளர் மகா சுசீந்திரன் பேசியுள்ளார்.

"திமுக அரசை முன்னாள் முதல்வர், துணை முதல்வர் எதிர்க்கமாட்டார்கள். திமுக அரசுக்கு எதிராக செயல்பட்டால் அவர்கள் சிறை செல்ல நேரிடும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“திமுகவை எதிர்த்து அதிமுக அரசியல் செய்ய முடியாது. அரசுக்கு எதிராக அதிமுக ஒரு அறிக்கைகூட விடமுடியாத சூழல் நிலவுகிறது. அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் காணப்பட்டது. அப்படி அரசுக்கு எதிராக பேசினால் முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர், முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வார்கள்” என்றார்.  கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் அவரது இந்த பேச்சு பாஜக- அதிமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com