ஆதார் அட்டை வழங்க லஞ்சம்: அட்டை ஒன்றுக்கு ரூ.250!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தேன்கனிகோட்டை அருகே ஆதார் அட்டை எடுக்க லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
உனிசெட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி பள்ளியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் நடந்துவருகின்றன. அதில் ஆதார் அட்டை ஒன்றுக்கு 200 முதல் 250 ரூபாய் வரை பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இதில் குழந்தைகளுக்கு ரூ.200ம், பெரியவர்களுக்கு ரூ.250ம் வசூலிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் சிலர் ரூபாய் 200 - 250 வழங்கி ஆதார் அட்டை பெற புகைப்படம் எடுத்து கொண்டதாக தெரிவித்தனர்.
தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டிய ஆதார் அட்டைக்கு பணம்பெற்ற விசயம் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏர்ப்படுத்தியது. இச்சம்பவம் குறித்து சார் ஆட்சியரிடம் செந்தில்ராஜ்யை கேட்டதற்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை எனவும் புகார்கள் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.