சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

'புதிய தலைமுறை' நெறியாளர் கார்த்திகேயன் நடத்திய நேர்காணலின்போது ஆணையர் பிரகாஷ் கூறுகையில், ''சென்னையில் தற்போதைய மக்கள்தொகை சுமார் 80 லட்சமாக இருக்கும் என்று கணித்திருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி சென்னை மாநகரில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. ஏப்ரல் இறுதிக்குள் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

சென்னையில் 450 தடுப்பூசி முகாம்கள் இயங்கி வருகின்றன. இன்றைய நிலவரப்படி 10 முதல் 15 நாட்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் நம் கையிருப்பில் உள்ளன. மாநகராட்சி ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் தடுப்பூசி செலுத்தும் பணியின் வேகம் குறைந்திருந்தது. தற்போது தேர்தல் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தி இருக்கிறோம். தற்போது நாளொன்றுக்கு 30,000 முதல் 35,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் நாளொன்றுக்கு 55,000 முதல் 60,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்'' என்று கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com