\
கொரோனா வைரஸ் பரவியதாக ‘வாட்ஸ் அப்’ வதந்தி : மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கொரோனா வைரஸ் பரவியதாக ‘வாட்ஸ் அப்’ வதந்தி : மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கொரோனா வைரஸ் பரவியதாக ‘வாட்ஸ் அப்’ வதந்தி : மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸால் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் காரணமாக ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வாட்ஸ்அப் மூலம் வதந்திகள் பரப்பட்டுள்ளன. இதனால் திருத்துறைப்பூண்டியைச் சுற்றியுள்ள மக்கள் அச்சமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற தயங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சிவக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மருத்துவமனையில் சாதாரண ஜுரம் காரணமாக கூட யாரும் அனுமதிக்கப்பட வில்லை என்றும், கொரோனா வைரஸால் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது முற்றிலும் தவறானது என்றும் தெரிவித்துக்கொண்டார்.

எனவே, பொது மக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை எனவும், வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். தற்போது வதந்தி பரப்பி நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com