\
சந்தேகிக்கப்பட்ட நபருக்கு தொற்று இல்லை : கொரோனா இல்லாத மாவட்டமான கிருஷ்ணகிரி

சந்தேகிக்கப்பட்ட நபருக்கு தொற்று இல்லை : கொரோனா இல்லாத மாவட்டமான கிருஷ்ணகிரி

சந்தேகிக்கப்பட்ட நபருக்கு தொற்று இல்லை : கொரோனா இல்லாத மாவட்டமான கிருஷ்ணகிரி
Published on

கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நோய்த்தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.

மைசூரிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வந்த நபருக்கு கொரோனா இருப்பதாக முதலில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ரத்த மாதிரி சென்னை கிங்ஸ் இண்ஸ்ட்டியூட்டுக்கு அனுப்பப்பட்டு இரண்டாவது கட்ட சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளதாகக் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாகக் கிருஷ்ணகிரி தொடர்கிறது. "கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த யாருக்கும் கொரானோ இல்லை" என்று மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தகவல் அளித்துள்ளார். அத்துடன் கொரோனா இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட நபருக்கு கொரோனா இல்லை என அவர் உறுதி செய்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com