தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா
Published on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரானா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாள்தோறும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சென்னையில் இன்று மட்டும் 11 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 3 நாட்களுக்கு பிறகு இன்று ஒரே நாளில் கொரானா பாதிப்பு 50 பேருக்கு மேல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com