கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி: குணமடைந்து குழந்தையுடன் டிஸ்சார்ஜ்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், குழைந்தை பெற்றதோடு இல்லாமல் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் மும்தாஜ். 42 வயது பெண்ணான இவர் ஒன்பது மாதம் கர்ப்பமாக இருந்த போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ஒரு அங்கமாக உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு (RSRM) பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் கொரோனா பாதிப்பு நெகட்டிவ் ஆனது. இதனையடுத்து அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
கொரோனாவில் இருந்து மீண்ட அந்த பெண் இன்று காலை 4 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஏற்கனவே அந்த பெண்ணிற்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு குழந்தை பிறந்துள்ளது.