வங்கி கணக்குகளில் ரூ.1000 ஏன் செலுத்தப்படவில்லை? : தமிழக அரசு விளக்கம்

வங்கி கணக்குகளில் ரூ.1000 ஏன் செலுத்தப்படவில்லை? : தமிழக அரசு விளக்கம்

வங்கி கணக்குகளில் ரூ.1000 ஏன் செலுத்தப்படவில்லை? : தமிழக அரசு விளக்கம்
Published on

கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பணம் வங்கி கணக்குகளில் ஏன் செலுத்தப்படவில்லை என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிப்பதை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ஆயிரம் ரொக்கத்துடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இது நேரியாகவே மக்களிடம் வழங்கப்படும் என்றே தெரிவிக்கப்பட்டது.

சமூக விலகல் கடைபிடிக்க வேண்டியுள்ளதாக, நேரில் பணத்தை வழங்குவது சரியாக இருக்குமா என்று பலரும் சந்தேகங்களை முன் வைத்தனர். வங்கிக் கணக்குகளில் பணத்தை போட்டுவிட்டால் எடுத்துக் கொள்வார்கள் என்று பலரும் கூறிவந்தனர். ஆனால், தமிழக அரசு நேரில் பணத்தை வழங்கும் நடவடிக்கையை இன்று துவங்கியுள்ளது. இந்நிலையில், வங்கிக் கணக்குகள் மூலம் ஏன் பணம் செலுத்தப்படவில்லை என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், “ரேஷன் அட்டைகளுடன் வங்கிக் கணக்குகள் இணைக்கப்படவில்லை. 2015 வெள்ளத்தின் போது வீடு வீடாக சென்று வங்கி கணக்குகள் பெறப்பட்டு வங்கியில் பணம் செலுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது அதற்கான கால அவகாசம் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “எனவே ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாய் விநியோகிக்கப்படுகிறது. கணக்கு எடுப்பதற்கு ஒரு மாத காலம் ஆகும் என்பதால் கணக்கெடுப்பை தற்போது செய்யவில்லை” எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com