கரூரில் 96 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழப்பு - உடலை தகனம் செய்ய மக்கள் எதிர்ப்பு

கரூரில் 96 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழப்பு - உடலை தகனம் செய்ய மக்கள் எதிர்ப்பு

கரூரில் 96 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழப்பு - உடலை தகனம் செய்ய மக்கள் எதிர்ப்பு
Published on

கொரோனா பாதிப்பால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 118 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனா தொற்றுலிருந்து பூரண குணமடைந்த 9 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட 96 வயது முதியவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது உடலை கரூர் பாலம்மாள்புரம் பகுதியில் அடக்கம் செய்ய கொண்டு சென்றபோது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

அவரது உடல் அரசு வழிக்காட்டுதல்களின் படி உரிய முறையில் அடக்கம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்தார். முதியவர் உயிரிழப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com