\
கொரோனா நிவாரண நிதி : ரூ.1 வழங்கிய வழக்கறிஞர்களால் அதிர்ச்சி

கொரோனா நிவாரண நிதி : ரூ.1 வழங்கிய வழக்கறிஞர்களால் அதிர்ச்சி

கொரோனா நிவாரண நிதி : ரூ.1 வழங்கிய வழக்கறிஞர்களால் அதிர்ச்சி
Published on

கொரோனா நிவாரண நிதியாக சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இரண்டு பேர் தலா ஒரு ரூபாய் வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிதி திரட்ட தொடங்கியதை அடுத்து, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் இரண்டரை லட்ச ரூபாய் நிதி வழங்கினார். அதேபோல், வழக்கறிஞர்கள் சிலர் தலா 5 லட்ச ரூபாய் வழங்கினர். தற்போது வரை 60 லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இரண்டு பேர் தலா ஒரு ரூபாய் நிதி வழங்கியுள்ளனர். மற்றொரு வழக்கறிஞர் 10 ரூபாய் வழங்கியுள்ளார். அவர்களின் உதவும் மனப்பான்மையை பாராட்டி சான்றிதழ் வழங்கப்படும் என இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். 

அதேநேரத்தில், வழக்கறிஞர்களின் இச்செயல் நிவாரணம் நிதி திரட்டுவதை கேலி செய்யும் வகையில் உள்ளதாக பார் கவுன்சில் உறுப்பினர் பால் கனகராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com