\
காஞ்சிபுரம் : கொரோனா பாதித்தவரின் மனைவி, மகளுக்கும் கொரோனா

காஞ்சிபுரம் : கொரோனா பாதித்தவரின் மனைவி, மகளுக்கும் கொரோனா

காஞ்சிபுரம் : கொரோனா பாதித்தவரின் மனைவி, மகளுக்கும் கொரோனா
Published on

காஞ்சிபுரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் மனைவி, மகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய 16 போ் காஞ்சிபுரம் காந்தி ரோடு பகுதியில் தங்கியிருந்தனா். அவா்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மற்ற 15 பேரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து காந்தி ரோடு பகுதியில் தங்கியிருந்தபோது 16 பேருக்கும் உணவு தயாரித்த சமையல்காரா் மற்றும் அவரது உதவியாளருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவா்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா்கள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியிலுள்ள கலைஞர் நகரைச் சார்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த நபரின் மனைவி மற்றும் மகள் இருவருக்கும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8 ஆக உயா்ந்துள்ளது. மேலும் அங்கு 1,030 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com