கொரோனா: கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி உட்பட 3 பேர் உயிரிழப்பு!

கொரோனா: கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி உட்பட 3 பேர் உயிரிழப்பு!

கொரோனா: கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி உட்பட 3 பேர் உயிரிழப்பு!
Published on

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று காலை உயிரிழந்தனர்

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒன்றாகவுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் சென்னை அதிகளவு பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. மே 1ஆம் தேதி மட்டும் சென்னையில் 176 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 316. கடந்த ஒரு வார இடைவெளியில் நாள் ஒன்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது. ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் சென்னையில் அதிகரித்த வண்ணமே உள்ளது. சென்னையில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 644. பிற மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை 2ஆயிரத்து 766 ஆக உள்ளது.

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று காலை உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் கோயம்பேடு சந்தையில் வியாபாரியாக இருந்தவர். மற்றவர் தாம்பரத்தைச் சேர்ந்த்வர் ஆவார். 66மற்றும் 77
வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களுக்கு ஏற்கெனவே சிறுநீரக பிரச்னை இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் சூளைமேட்டைச் சேர்ந்த 80 வது மூதாட்டி கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com