சுதீஷை தொடர்ந்து சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளருக்கு கொரோனா!

சுதீஷை தொடர்ந்து சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளருக்கு கொரோனா!
சுதீஷை தொடர்ந்து சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளருக்கு கொரோனா!

சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில் வேட்பாளர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மோகன்ராஜ் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட கடந்த 19ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com