தமிழ்நாடு
தினசரி கொரோனா பாதிப்பு 7,000-ஐ நெருங்கியது: தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
தினசரி கொரோனா பாதிப்பு 7,000-ஐ நெருங்கியது: தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 7,000 ஐ நெருங்கியது.
இன்றைக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை கூறியதாவது, “ தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,984 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் 6,958 நபர்களுக்கும் வெளி நாடுகளில் இருந்து வந்த 26 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முன்னதாக சென்னையில் 2, 105 நபர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இன்று மட்டும் கொரோனா தொற்றுக்கு 18 பேர் இறந்த நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,945 ஆக உயர்ந்துள்ளது.