தமிழ்நாடு
கொரோனா தடுப்பூசி: உலகளாவிய ஒப்பந்த புள்ளி கோரியது தமிழக அரசு
கொரோனா தடுப்பூசி: உலகளாவிய ஒப்பந்த புள்ளி கோரியது தமிழக அரசு
கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்காக உலகளாவிய ஒப்பந்த புள்ளியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கோரியுள்ளது.
புதிய அரசு பதவியேற்றவுடன் கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்காக உலகளாவிய ஒப்பந்தம் போடப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்காக உலகளாவிய ஒப்பந்த புள்ளியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கோரியுள்ளது. அதாவது தடுப்பூசி தயாரிக்கும் யாரும், இந்த கொள்முதலில் பங்கேற்கலாம். இதற்கு ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். 90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும். அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற வரைமுறைகளையும் தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் வழங்கியுள்ளது.