\
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 15 பேர், அவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேருக்கு கொரோனா

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 15 பேர், அவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேருக்கு கொரோனா

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 15 பேர், அவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேருக்கு கொரோனா
Published on

பிரிட்டனில் இருந்த தமிழகம் வந்தவர்களில் 13 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

இது தொடர்பாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் கூறும்போது, “ பிரிட்டனில் இருந்த வந்தவர்களில் இதுவரை 13 பேருக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் ஆக மொத்தம் 28 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை. உருமாறிய கொரோனா வந்தாலும் அதனை கட்டுப்படுத்தக் கூடிய கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது.”என்றார்.

மேலும் புற்றுநோய் தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் ஆண்களை விட பெண்களுக்கே புற்றுநோய் ஏற்படும் விகிதம் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com