கொரோனா கால மகத்துவர்: ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியாக வழங்கிய நடத்துனர் நேசமணி

கொரோனா கால மகத்துவர்: ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியாக வழங்கிய நடத்துனர் நேசமணி
கொரோனா கால மகத்துவர்: ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியாக வழங்கிய நடத்துனர் நேசமணி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு போக்குவரத்து பணிமனையில் நடத்துனராக பணிபுரியும் நேசமணி என்பவர் தனது ஒரு மாத சம்பளம் 33 ஆயிரத்தை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்களை கேட்டுக்கொண்டதை அடுத்து தொழிலாளிகள் நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளத் தொகையை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு போக்குவரத்து பணிமனையில் நடத்துனராக பணி செய்து வருபவர் நேசமணி இவர், தனது ஒரு மாத சம்பளமான ரூபாய் 33 ஆயிரத்தை கோடிட்ட காசோலையாக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

இதுபோன்று மற்றவர்களும் முதலமைச்சர் கொரோனா நிவாரணத்திற்கு நிதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் இவரது செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com