\
தஞ்சை: பள்ளிகளில் வேகமாக பரவும் கொரோனா பாதிப்பு

தஞ்சை: பள்ளிகளில் வேகமாக பரவும் கொரோனா பாதிப்பு

தஞ்சை: பள்ளிகளில் வேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
Published on: 

தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியைகள் மற்றும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 56க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் பட்டுக்கோட்டை, மதுக்கூர் பகுதி பள்ளிகளிலும் மாணவிகள் ஆசிரியைகளுக்கு தொற்று உறுதியாகியிருந்தது. அந்த வரிசையில் தற்போது 4 ஆவதாக மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியைகள் மற்றும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இராண்டாவது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்களிடம் எழுந்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஊரடங்கு அமல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com