கொரோனா பரவல்: தியேட்டர், பார் வழிபாட்டு தலங்களை மூட சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கொரோனா பரவல்: தியேட்டர், பார் வழிபாட்டு தலங்களை மூட சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கொரோனா பரவல்: தியேட்டர், பார் வழிபாட்டு தலங்களை மூட சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Published on

கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், டாஸ்மாக் பார், திரையரங்குகள், வழிபாட்டு தலங்களை மூடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், 2020ம் ஆண்டு பரவத் துவங்கிய கொரோனாவின் தாக்கம் தணிந்து வந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 21ம் தேதி நிலவரப்படி, 47 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரிக்கு பின் தொற்று பரவல் 4.5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்தியாவில் 5.81 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாகவும், மாவட்ட அளவில் நிலைமையை ஆராய்ந்து கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க, டாஸ்மாக் பார்கள், திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள், விளையாட்டு மைதானங்களை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com