ஈஷா யோகா மையத்தில் உள்ளவர்களுக்கு  கொரோனா அறிகுறி இல்லை - மாவட்ட ஆட்சியர் ராஜாமணி

ஈஷா யோகா மையத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை - மாவட்ட ஆட்சியர் ராஜாமணி

ஈஷா யோகா மையத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை - மாவட்ட ஆட்சியர் ராஜாமணி
Published on

ஈஷா யோகா மையத்தில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லையென அம்மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அம்மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நபர்களின் குடும்பத்தினருக்கு தொற்று இருக்கிறதா என கண்டறிய 206 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்தப் பரிசோதனையின் முடிவில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 64 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை வந்துள்ளதாகவும், மீதமுள்ளவர்களுக்கு முடிவுகள் வர வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் ஈஷா யோகா மையம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஆட்சியர் ஈஷாவில் மொத்தம் 300 வெளிநாட்டினர் உள்ளதாகவும், இதில் 150 நபர்கள் ஜனவரி மாதத்திற்கு முன்னர் இருந்தே இருப்பதாகவும் கூறினார். மேலும் ஈஷா யோக மையத்தில், முழுமையான பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில், ஈஷா யோக மையத்தில் உள்ள யாருக்கும் கொரோனா அறிகுறிகள் இல்லை என்றும் விளக்கமளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com