தமிழ்நாடு
கொரோனா தடுப்பு விதிமீறல்: சென்னையில் ஒரே நாளில் ரூ.1,13,300 அபராதம் வசூல்
கொரோனா தடுப்பு விதிமீறல்: சென்னையில் ஒரே நாளில் ரூ.1,13,300 அபராதம் வசூல்
சென்னையில் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாதவர்களிடம் ஒரே நாளில் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க வரும் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூடும் இடங்களில் அக்குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 54 திருமண மண்டபங்களுக்கு 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.