திரைப்பட இயக்குநர் சுராஜுக்கு கொரோனா தொற்று

திரைப்பட இயக்குநர் சுராஜுக்கு கொரோனா தொற்று

திரைப்பட இயக்குநர் சுராஜுக்கு கொரோனா தொற்று
Published on

நகைச்சுவை நடிகர் வடிவேலுவைத் தொடர்ந்து இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் எனும் திரைப்படத்தை சுராஜ் இயக்கிவருகிறார். அதற்கான இசை உருவாக்கப் பணிக்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் வடிவேலு, இயக்குநர் சுராஜ் ஆகியோர் லண்டன் சென்றிருந்தனர்.

சமீபத்தில் அங்கிருந்து திரும்பிய நிலையில் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவரைத் தொடர்ந்து சுராஜுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தாம் நலமாக இருப்பதாக புதிய தலைமுறைக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com