மதுரையில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை : தாயும், சேயும் நலம்..
மதுரையில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் குழந்தை பிறந்துள்ளது.
மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் அவர் மதுரை அரசு ராஜாஜி கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு இன்று அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. 2.8 கிலோ எடையில் பிறந்த குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கும் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரத்துக்குப் பின்னர் குழந்தைக்கு கொரோனா தொற்று தாக்கம் உள்ளதா ? என்பது குறித்து பரிசோதனை நடத்தப்படும் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அம்பாசமுத்திரம் புதூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தைக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளதா என்பது குறித்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன் குழந்தைக்கு பாதிப்பு உள்ளதா ? இல்லையா ? என்பது குறித்து தெரிவிக்கப்படும் என தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.