முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா

முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா

முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா
Published on

முதலமைச்சர் பழனிசாமி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37,53,815 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,59,383 ஆக உள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41,391 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,694 ஆக உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4829 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உள்ளது.

கொரோனாவை கட்டுக்குள் வைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களை வெளியே வராமல் தடுக்க காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில் சென்றிருந்த பெண் காவலருக்கு தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com