தமிழகத்தில் 1500-ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 1500-ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் 1500-ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1500-ஐ நெருங்கியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 1437 பேருக்கு இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1428 பேர், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 9 பேர் என 1437 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

76,128 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஒரேநாளில் தொற்று எண்ணிக்கை 1,437ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக மேலும் 9 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,618 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 9,145ஆக அதிகரித்துள்ளது.

சென்னையிலும் கொரோனா பாதிப்பு 500-ஐ கடந்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே 466 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று ஒரேநாளில் 532 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com