தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் 2,084, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 5 பேர் என ஒரேநாளில் 2,089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே 664 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 775 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 12,157ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 1241 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8,52,463 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக ஒரேநாளில் 9 பேர் இறந்தநிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,659ஆக உயர்ந்துள்ளது.