கொரோனா கால மகத்துவர்: நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கிய நத்தம் அறக்கட்டளை

கொரோனா கால மகத்துவர்: நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கிய நத்தம் அறக்கட்டளை
கொரோனா கால மகத்துவர்: நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கிய நத்தம் அறக்கட்டளை

திண்டுக்கல்லில் நலிவடைந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு 'பசியில்லா நத்தம் அறக்கட்டளை' சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், 'பசியில்லா நத்தம் அறக்கட்டளை' சார்பாக நிவாரண பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து திண்டுக்கல்லில் நலிவடைந்த தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், நாடக மற்றும் மேடை கலைஞர்களுக்கு முதற்கட்டமாக அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் என ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை 'பசியில்லா நத்தம் அறக்கட்டளை' சார்பாக நிறுவனர் மதுசூதனன் வழங்கினார்.இவர் தினமும் சாலையோரம் உணவின்றி தவிக்கும் மக்கள் 300-க்கும் மேற்பட்டோர்க்கு உணவு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com