தமிழகத்தில் 2 வாரங்களில் கொரோனா உச்சம் தொடும்: எச்சரிக்கும் அமெரிக்க ஆய்வு நிறுவனம்

தமிழகத்தில் 2 வாரங்களில் கொரோனா உச்சம் தொடும்: எச்சரிக்கும் அமெரிக்க ஆய்வு நிறுவனம்
தமிழகத்தில் 2 வாரங்களில் கொரோனா உச்சம் தொடும்: எச்சரிக்கும் அமெரிக்க ஆய்வு நிறுவனம்

தமிழகத்தில் இன்னும் 2 வாரங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டும் என அமெரிக்காவின் சுகாதார மதிப்பீடு ஆய்வு நிறுவனமான ஐ.எச்.எம்.இ. எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் பாதிப்பு உச்சத்தை தொடும் போது, உயிரிழப்போர் எண்ணிக்கையும் ஒருநாளைக்கு 850ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது தொற்று பரவல் வேகத்தை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்களுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருக்காது என்றும் ஐ.எச்.எம்.ஐ. தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே தற்போது கொரோனா தொற்றின் வீரியத்திலிருந்து மக்களை காக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்களின் மாதிரிகளும் மே மையத்தில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் பன்மடங்கு அதிகரிக்கும் என்றே கூறுகிறது. எனவே மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே கொரோனாவின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com