தமிழ்நாடு
“அருகில் வந்தால் கட்டிப்பிடித்து விடுவேன்” - மிரட்டல் விடுத்த கொரோனா நோயாளி
“அருகில் வந்தால் கட்டிப்பிடித்து விடுவேன்” - மிரட்டல் விடுத்த கொரோனா நோயாளி
(கோப்பு புகைப்படம்)
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து தப்பிய கொரோனா நோயாளி, பிடிக்க வந்த காவலர்களிடம் அருகே வந்தால் கட்டிப்பிடித்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 45 வயதான நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று இரவு மருத்துவமனையிலிருந்து தப்பிய அவர், வீட்டுக்கு சென்றது தெரியவந்தது.
அவரிடம் விசாரித்ததில், சிகிச்சைக்கு பயந்து மருத்துவமனையை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளார். அவரை அழைத்துச் செல்ல காவல்துறையினர் முற்பட்டுள்ளனர். அப்போது, தன்னை பிடிக்க முயன்றால் கட்டிப்பிடித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். பின்னர் காவலர்கள் அவரை சமாதானம் செய்தும், மருத்துவமனைக்கு வர மறுத்து வருகிறார்.