கிராமத்திற்குள் நுழைந்த செல்போன் சிக்னல் - தனிமைப்படுத்தப்பட்ட கிராமம்..!

கிராமத்திற்குள் நுழைந்த செல்போன் சிக்னல் - தனிமைப்படுத்தப்பட்ட கிராமம்..!
கிராமத்திற்குள் நுழைந்த செல்போன் சிக்னல் - தனிமைப்படுத்தப்பட்ட கிராமம்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் மனைவி பயன்படுத்திய செல்போன் சிக்னல், கிராமத்திற்குள் நுழைந்தது டவர் மூலம் தெரியவந்ததால் அக்கிராமமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற ஒருவருக்கு சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது குடும்ப உறுப்பினர்களும் 28 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே தொற்று உறுதி செய்யப்பட்ட அவரின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாளேதோட்டம் கிராமத்திற்கு சென்றதாக சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து போச்சம்பள்ளி போலீசார், போச்சம்பள்ளி வட்டாட்சியர், வட்டார மருத்துவ அலுவலர்கள் என அனைவரும் பாளேதோட்டம் விரைந்து சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் அங்கே அப்பெண் இல்லை. இதனையடுத்து அவரை தொலைபேசி வாயிலாக காவல்துறையினர் தொடர்பு கொண்டனர். அப்போது பேசிய அப்பெண், தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்றும் தான் ஒருபோதும் கிருஷணகிரிக்கு சென்றதில்லை என்றும் கூறியுள்ளார்.

இருப்பினும் அவரது தொலைபேசி பாளேதோட்டம் பகுதியில் வந்திருப்பது டவர் மூலம் தெரியவந்துள்ளதால், அக்கிராமத்தை சுற்றி 5 கி.மீ. தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு பொதுமக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே கொண்டு சென்று கொடுக்க ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கிறது.மேலும் சந்தேகத்தின் பேரில் உள்ள ஐந்து நபரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை கண்காணிக்க 12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com