மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள தெங்குமரஹாடாவில் 25 பேருக்கு கொரோனா உறுதி!

மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள தெங்குமரஹாடாவில் 25 பேருக்கு கொரோனா உறுதி!

மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள தெங்குமரஹாடாவில் 25 பேருக்கு கொரோனா உறுதி!
Published on

மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள தெங்குமரஹாடாவில் 25 பேருக்கு கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் புலிகள் காப்பகம், அடர்ந்த காட்டுப்பகுதியில் மலைகளுக்கு நடுவே தெங்குமராஹாடா கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தை சுற்றிலும் மாயாறு ஓடுவதால் பரிசல் மூலம் மட்டுமே ஆற்றைக் கடந்து கிராமத்துக்கு செல்ல இயலும். சுமார் 1500 பேர் வசிக்கும் இங்கு விவசாயம், மலைக்காய்கறிகள் முக்கிய தொழிலாக உள்ளது.

இந்நிலையில், வெளியாட்கள் இக்கிராமத்துக்குள் எளிதாக நுழைய முடியாத நிலையில் கொரோனா தொற்று இங்கும் பரவியுள்ளது. தினந்தோறும் விவசாயப்பணி, மாடு மேய்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடும் இப்பகுதி மக்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், 2 குழந்தைகள், 10 பெண்கள், 13 ஆண்கள் என 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெங்குரஹாடா ஆரம்ப சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது. அதில் 3 பேர் சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நோய்த் தொற்று காரணமாக கிராமத்தில் தொடர்பில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் கிராமத்தில் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெங்குமராடா ஊராட்சித் தலைவர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com