\
"சிறைகளில் கொரோனா அதிகரிப்பு"-பேரறிவாளனுக்கு  விடுப்பு வழங்க அற்புதம் அம்மாள் கோரிக்கை

"சிறைகளில் கொரோனா அதிகரிப்பு"-பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்க அற்புதம் அம்மாள் கோரிக்கை

"சிறைகளில் கொரோனா அதிகரிப்பு"-பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்க அற்புதம் அம்மாள் கோரிக்கை
Published on

சிறைகளில் கொரோனா பரவலும், மரணங்களும் அதிகரித்து வருவதால் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அற்புதம் அம்மாள் கோரிக்கை வைத்திருக்கிறார்.  

இது தொடர்பாக அற்புதம் அம்மாள் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சிறைகளில் பரவி வரும் கொரோனா கிருமி தொற்றும் மரணங்களும் மிகுந்த அச்சத்தை தருகிறது. ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அறிவுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என சிறைத்துறை மருத்துவர்கள் ஏற்கனவே அறிக்கை தந்துள்ளனர்.

மேலும் அறிவுக்கு தடைபட்டுள்ள மருத்துவத்தை தொடர வேண்டியுள்ளது. இதனை குறிப்பிட்டு நீண்ட விடுப்பு வழங்கக்கோரி 10ம்தேதி மனு அனுப்பியுள்ளேன். உச்ச நீதிமன்றம் 90 நாட்கள் விடுப்பு வழங்கலாமென 7ஆம்தேதி உத்தரவிட்டுள்ளது. எனவே மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறேன்” எனத் தெரிவித்தார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com