சென்னையில் அக்டோபரில் கொரோனா பாதிப்பு குறைவு

சென்னையில் அக்டோபரில் கொரோனா பாதிப்பு குறைவு
சென்னையில் அக்டோபரில் கொரோனா பாதிப்பு குறைவு

சென்னையில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்களை ஒப்பிடுகையில், கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் முதல் கொரோனா தடுப்புப் பணிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து அதற்கான பணிகள் ஒவ்வொரு மண்டலத்திலும் நடைபெற்றுவருகின்றன.

கொரோனா தடுப்புப் பணிக்காக காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடமாடும் மருத்துவ மையங்கள் எனப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சென்னையில் மார்ச் மாதம் 20 ஆம் தேதி வரை ஆறு பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அதுவே ஜூன் 20 ஆம் தேதி 41 ஆயிரமாக இருந்தது.

நோய்த்தொற்று பாதிப்பு ஜூன் 20 ஆம் தேதி 41 ஆயிரத்தையும் கடந்தது. தீவிர தடுப்புப் பணிகள், சிகிச்சைகள் காரணமாக படிப்படியாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அக்டோபர் மாத ஆரம்பத்தில், 1200 வரை நாள்தோறும் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அது தற்போது 800 ஆக குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி வரையில் நோய்த்தொற்றைக் கணக்கிடுகையில் அக்டோபரில் அது வெகுவாக குறைந்துள்ளது.

நோய்த்தொற்று குறைந்துவந்தாலும், அடுத்துவரும் பண்டிகை நாள்களில் வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் அதிக மக்கள் கூடுவார்கள். அதனால் மீண்டும் நோய்த்தொற்று அதிகரித்துவிடாமல் தடுக்க அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொய்வின்றி கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com