சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. மொத்தமாக தமிழகத்தில் நேற்று 121 நபர்களுக்கு கோரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 103 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் சென்னையில் கோரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை மந்தை வெளியை சேர்ந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர், அவரது மனைவி, மகள், மகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களது வீட்டில் தங்கியிருந்த அறிகுறிகள் இல்லாமல் இருந்த உறவினர்களையும் பரிசோதனைக்காக மாநகராட்சி அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அவர்களது சூப்பர் மார்க்கெட் மூடப்பட்டது. அத்துடன், அதற்கு கிரிமி நாசினியும் தெளிக்கப்பட்டது. அதேபோல், சூப்பர் மார்க்கெட் சென்று வந்தவர்களையும் கண்டறியும் பணிகள் தொடங்கியது.